News March 4, 2026
திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் திருவிடைக்கழி ஊராட்சி ஒன்றிய இளைஞரணி செயலாளர் திருமுருகன் தரங்கம்பாடி பேரூர் செயலாளர் அழகிரிசாமி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மாவட்ட செயலாளர் அவர்களுக்கு கட்சித்துண்டு அணிவித்து கட்சிக்கு வரவேற்றார் நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர
Similar News
News April 3, 2026
மாயவரம்: ஒரே மேடையில் நின்ற 2 வேட்பாளர்கள்!

மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ் அணி சார்பில், மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக மயிலாடுதுறை வேட்பாளர் சித்தமல்லி பழனிசாமி மற்றும் பூம்புகார் அதிமுக வேட்பாளர் எஸ் பவுன்ராஜ் உள்ளிட்டோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
News April 3, 2026
மாயவரம்: பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

பொதுமக்கள் இணையத்தில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை கண்டு பொருட்கள் வாங்கி ஏமாற வேண்டாம். அவற்றின் உண்மை தன்மையை ஆய்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட இணையதளமா என உறுதி செய்த பின்பு பொருட்களை வாங்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News April 3, 2026
மாயவரம்: ரூ.95 ஆயிரம் பறிமுதல் செய்த பறக்கும் படை

சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் பறக்கும் படை அதிகாரி பாலமுருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த மாயிலாடுதுறையை சேர்ந்த சரவணன் என்பவரை சோதனை செய்ததில், அவரிடம் உரிய ஆவணம் ரூ.95ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. பின்னர் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் பணத்தை, சீர்காழி மண்டல தாசில்தார் பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டது.


