News March 29, 2025

திமுகவின் நாடகங்களை மக்கள் நம்ப போவதில்லை

image

அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் இன்று நடைபெற்ற மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் பாஜகவை சேர்ந்த பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.‌ இந்நிலையில் தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் மோசடியில் ஈடுபடும் திமுகவின் அரசியல் நாடகங்களை மக்கள் நம்பப் போவதில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோவை பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளார்.

Similar News

News April 1, 2025

விருதுநகரில் வேலைவாய்ப்பு  முகாம்

image

விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் பயின்ற ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல் பட்டதாரிகள், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் மற்றும் கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான முகாம் 09.04.2025 அன்று காலை 8.30 மணி முதல் விருதுநகர் மாவட்டம், வீரசோழன் கிராமத்தில் உள்ள அல் அமீன் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. வேலைத்தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் 

News April 1, 2025

விருதுநகர்: நிலப்பிரச்சனைகளை தீர்க்கும் கோவில்

image

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் திருமேனிநாதர் கோவில் உள்ளது. இங்கு திருமேனிநாதர், பூமிநாதர் இறைவனாகவும், துணைமலைநாயகி இறைவியாகவும் உள்ளனர். இத்தலத்தில் சிவன் ஒரு சமயம் பிரளயத்தைச் சுழித்து பூமிக்குள் புகச் செய்தார் என்பது நம்பிக்கை. அதேபோல இங்கு வழிபட்டால் முன்னோர்களின் சாபம், நிலப் பிரச்சனைகள் தீரும் என்றும் நம்பப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்

News April 1, 2025

விருதுநகரில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப். 4,5 அன்று விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!