News December 16, 2025
திமுகவின் அடுத்த முகமா உதயநிதி?

வாரிசு அரசியல் என்ற விமர்சனம் திமுக மீது இன்றும் உள்ளது. இந்நிலையில், உதயநிதி முதலில் கட்சியில் இணைந்தபோது, சொந்த கட்சியினரே அதிப்ருதியில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், சமீபமாக உதயநிதியே திமுகவை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வார் என மூத்த தலைவர்களே கூறிவருகின்றனர். அதேநேரம், அவர் <<18564320>>திராவிட கொள்கைகளை<<>> முன்னெடுத்து செல்கிறார் என்றும் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News December 18, 2025
விஜய்க்கு பின் சென்ற வாகனம் விபத்து

தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை பைக்கில் பின்தொடர்ந்த தவெகவினர் விபத்தில் சிக்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லக்கவுண்டம்பாளையம் மேம்பாலத்தில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயன்றனர். அப்போது, 2 பைக்குகள் மோதி கீழே விழுந்த நிலையில், அவற்றின் மீது பக்கவாட்டில் வந்த பைக்குகள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
News December 18, 2025
ஜி.கே.மணிக்கு பாமக நோட்டீஸ்!

ஜி.கே.மணி, பாமகவுக்கு எதிராகவும், கட்சி தலைமைக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது. மேலும், தலைவர் அன்புமணி மீது அவதூறு பரப்பும் வகையில் பேட்டியளித்த ஜி.கே.மணி விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தை ஒருவாரத்திற்குள் அளிக்கும்படியும் குறிப்பிட்டுள்ளது.
News December 18, 2025
திமுக ஒரு தீய சக்தி.. தவெக ஒரு தூய சக்தி: விஜய்

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையை பேசி திமுகவை காலி செய்தார்கள் என விஜய் கூறியுள்ளார். திமுகவை கடுமையாக சாடுவதற்கு அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளை தானும் பயன்படுத்துவேன் எனக் குறிப்பிட்ட விஜய், திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி என்று முழக்கமிட்டார். மேலும், திமுக எனும் தீய சக்தியை ஒழிக்க வந்திருக்கும் தூய சக்தி தான் TVK என்றும் அவர் தெரிவித்தார்.


