News March 21, 2024

தினம் ஒரு தொகுதி: இன்று ஸ்ரீபெரும்புதூர்

image

பெரும் நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டின் பெரிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்று ஸ்ரீபெரும்புதூர். மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், திருப்பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 திமுக வசமுள்ளன. இதுவரை இங்கு நடந்த 14 தேர்தல்களில் திமுக 8, காங். & அதிமுக தலா 3 முறை வென்றுள்ளன. 2019 தேர்தலில் T.R.பாலு 5,07,955 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

Similar News

News February 6, 2026

H.ராஜாவை சந்தித்து நலம் விசாரித்தார் அண்ணாமலை

image

சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்றுவரும் பாஜக மூத்த தலைவர் H.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஹாஸ்பிடலுக்கு விரைந்த அண்ணாமலை, H.ராஜாவை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், குடும்பத்தினரிடமும் அவர் தைரியம் கூறினார். H.ராஜா நலம்பெற வேண்டி பழனி முருகன் கோயிலுக்கு அண்ணாமலை காவடி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

News February 6, 2026

அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய இதுவே காரணம்: TTV

image

பிஹார் தேர்தலுக்கு முன்னரே NDA-வில் இணைய டெல்லியில் இருந்து அழைப்பு வந்ததாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தல் முடிந்த பின், தன்னை நேரில் அழைத்து அமித்ஷா கூட்டணியில் சேர கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். NDA-வில் சேர தனக்கு ஆட்சேபனை இல்லை, ஆனால் EPS-ன் நிலைப்பாடு என்னவென கேட்ட போது, அவருக்கு முழு சம்மதம் என அமித்ஷா சொன்ன பிறகே கூட்டணியில் இணைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

News February 6, 2026

விஜயகாந்த் மரணம் குறித்து அவதூறு… டிஜிபியிடம் புகார்

image

விஜயகாந்த் மரணம் குறித்து அவதூறாக வீடியோ பதிவிட்டதாக யூடியூபர்கள் சிலர் மீது தேமுதிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி சூர்யா, தமிழா தமிழா பாண்டியன், சவுக்கு சங்கர் உள்ளிட்டோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேமுதிகவின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்தில் பிரேமலதா குறித்து அவதூறு பரப்பப்படுவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!