News January 7, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 573
▶குறள்:
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். ▶பொருள்: பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.

Similar News

News January 26, 2026

கரூர் விவகாரம்: விஜய்க்கு எச்சரிக்கை

image

விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லாததால்தான் அவருடன் யாரும் சேரவில்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். அரசியலில் விஜய் 0 மாதிரி என்ற அவர், தனியாக இருந்தால் ஜீரோவுக்கு மதிப்பில்லை, ஆனால் யாருடனாவது சேர்ந்தால் அதற்கு மதிப்பு உண்டு எனவும் கூறியுள்ளார். மேலும் NDA ஆட்சியில் பிரச்னையின்றி விஜய் அரசியல் செய்ய முடியும், ஆனால் DMK ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை அவர் நினைவில் கொள்ளவேண்டும் என எச்சரித்துள்ளார்.

News January 26, 2026

₹5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறும் அசத்தல் திட்டம்

image

உங்கள் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு மருத்துவ செலவு அதிகமாக இருக்கிறதா? மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் மூலம் அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை பார்க்கலாம். இத்திட்டத்தின் மூலம் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சைக்காக ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை கிடைக்கிறது. விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும். நண்பர்கள் அனைவருக்கும் இப்பதிவை ஷேர் பண்ணுங்க.

News January 26, 2026

வெள்ளி இன்று கிலோவுக்கு ₹10,000 உயர்வு!

image

<<18960694>>தங்கத்துடன்<<>> போட்டிப் போட்டுக் கொண்டு வெள்ளி விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று(ஜன.26) வெள்ளி விலை 1 கிராம் ₹10 உயர்ந்து ₹375-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹10,000 உயர்ந்து ₹3,75,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 7% உயர்ந்து ஒரு அவுன்ஸ்(28g) $108-க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!