News December 31, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 566
▶குறள்:
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.
▶பொருள்: கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.
Similar News
News February 9, 2026
முழிச்சிட்டீங்களா… அப்போ உடனே போய் பாருங்க!

குடியரசு தினத்தில் ராணுவ அணிவகுப்பை பார்த்திருப்போம். வானில் அரிய நிகழ்வான கோள்களின் அணிவகுப்பை பார்த்திருக்கிறீர்களா? புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ் & நெப்டியூன் ஆகிய 6 கோள்கள் காலை சூரிய உதயத்திற்கு பிறகு வானில் தெளிவாக தெரியும் நிகழ்வை, இன்றிலிருந்து பிப்.28 வரை தினமும் பார்க்கலாம் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளது. அதை வெறும் கண்களாலும் பார்க்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
News February 9, 2026
FLASH: டாஸ்மாக் கடைகள் இன்று அரை நாள் இயங்காது

ஊழியர்களின் ஸ்டிரைக் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இன்று(பிப்.9) அரை நாள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை கடைகள் செயல்படாது. 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம், பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாள்களாக டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
News February 9, 2026
பாமக வழக்கில் குறுக்கே புகுந்த தேர்தல் ஆணையம்

பாமக கட்சியை அபகரித்ததாக ராமதாஸ் தொடர்ந்த வழக்கில், அங்கீகரிக்கப்படாத கட்சி விவகாரங்களில் ECI தலையிட முடியாது என டெல்லி HC கூறியிருந்தது. மேலும், இதுதொடர்பாக சிவில் கோர்ட்டை அணுகுமாறும் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், இதனை மறுஆய்வு செய்யக் கோரி ECI கோர்ட்டில் முறையிட்டுள்ளது. இந்த மறுஆய்வு ஏற்கப்பட்டால், மாம்பழ சின்ன வழக்கு தள்ளிவைக்கப்படும். இது ராமதாஸுக்கு பின்னடைவாக அமையும்.


