News December 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 564
▶குறள்:
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
▶பொருள்: நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.
Similar News
News January 6, 2026
₹2,000 நோட்டுகள்.. RBI முக்கிய தகவல்

புழக்கத்தில் இருந்த ₹2,000 நோட்டுகளில் 98.41% மீண்டும் வங்கிகளுக்கு திரும்பிவிட்டதாக RBI தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ₹5,669 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் மக்களிடம் உள்ளன. உங்களிடம் ₹2,000 நோட்டுகள் இருந்தால், அவற்றை RBI-ன் கிளை அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். 2023 மே மாதத்தில் இருந்து ₹2,000 நோட்டுகளின் புழக்கத்தை RBI நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
News January 6, 2026
பொங்கல் விடுமுறை.. ஜன.9 முதல் சிறப்பு பஸ்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளியூரில் இருப்போர் சிரமமின்றி சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஜன.9 – 14 வரையிலான 6 நாள்களில், வழக்கமாக இயக்கப்படும் (2,092) பஸ்களை விட கூடுதல் எண்ணிக்கையில் (22,797) சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சொந்த ஊர் செல்வோர் இங்கே <
News January 6, 2026
₹9.2 கோடி இல்லை.. வெறும் கையோடு திரும்பும் வீரர்!

₹9.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தபிஃசுர் ரஹ்மானை KKR விடுவித்துள்ளது. பொதுவாக, ஒரு வீரர் காயம் (அ) வேறு எந்த தவறும் செய்யாத நிலையிலோ அணியில் இருந்து நீக்கப்பட்டால், அவருக்கு அந்த அணி இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். ஆனால் <<18751941>>முஸ்தபிஃசுர்<<>>, இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவு விரிசல் காரணமாக, BCCI உத்தரவால் விடுவிக்கப்பட்டதால், அவருக்கு இழப்பீடு வழங்க தேவையில்லை என கூறப்படுகிறது.


