News December 23, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 558 ▶குறள்: இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின். ▶பொருள்: வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது.

Similar News

News February 3, 2026

வானதிக்கு அழுத்தம் கொடுக்கிறாரா SP.வேலுமணி?

image

கோவை தெற்கின் சிட்டிங் MLA-வாக இருக்கும் வானதியை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுமாறு SP.வேலுமணி அழுத்தம் கொடுப்பதாக தகவல் கசிந்துள்ளது. 2016-ல் கோவை தெற்கில் அதிமுகவின் அம்மன் அர்ஜுனன் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், 2021-ல் வானதி அத்தொகுதியை கேட்கவே, அம்மன் அர்ஜுனன் வடக்கில் போட்டியிட்டார். எனவே, வரும் தேர்தலில் அம்மன் அர்ஜுனனை மீண்டும் தெற்கில் நிற்க வைக்க SP.வேலுமணி திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

News February 3, 2026

தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகல்

image

சிங்காநல்லூர் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் இப்போது தன்னால் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, காலமும் நேரமும்தான் முடிவு செய்யும் என சூசகமாகவே பதிலளித்தார்.

News February 3, 2026

எதிர்க்கட்சிகளின் அமளியால் லோக் சபா ஒத்திவைப்பு

image

இந்திய – அமெரிக்க வர்த்தக விவகாரம் குறித்து பேச வேண்டும் என வலியுறுத்தி லோக் சபாவில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் இருக்கை அருகே சென்ற காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி MP-க்கள், பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனையடுத்து 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

error: Content is protected !!