News November 3, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 508 ▶குறள்: தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். ▶பொருள்: நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.

Similar News

News November 3, 2025

டெல்டாவில் தனி கவனம் செலுத்தும் EPS

image

2021-ல் கொங்குவில் அதிக இடங்களை கைப்பற்றிய அதிமுக, டெல்டா, தென் தமிழகத்தில் கோட்டை விட்டது. தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைந்ததால், 2026-ல் தென்மாவட்டங்களில் கனிசமான வாக்குகளை பெறலாம் என நம்பும் EPS , நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தி, பூத் வாரியாக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்டப் பொறுப்பாளர்களுடன் EPS ஆலோசித்துள்ளார்.

News November 3, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹320 உயர்வு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் ₹11,350-க்கும், சவரன் ₹90,800-க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் ஏற்றம், இறக்கம் கண்டு வந்த தங்கம், இந்த வாரத்தின் முதல் நாளிலேயே மிகப்பெரிய மாற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. <<18183589>>பங்குச்சந்தைகள் தொடர்ந்து<<>> சரிந்து வருவதால் இன்று மாலையிலும் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News November 3, 2025

EPS சிறை செல்ல திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஆசை: TTV

image

கோடநாடு வழக்கில் EPS-ஐ கைது செய்ய திண்டுக்கல் சீனிவாசன் விரும்புவதாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். கோடநாடு வழக்கில் EPS தான் A1 என செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், உண்மையாகவே குற்றத்தை நிரூப்பித்துவிட்டு EPS-யை கைது செய்யுங்கள் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார். இந்நிலையில், EPS உடன் இருப்பவர்கள் மனவருத்தத்தில் இருப்பதாகவும், EPS-ன் வீழ்ச்சிக்காக காத்திருப்பதாகவும் TTV கூறியுள்ளார்.

error: Content is protected !!