News January 1, 2026

தினமும் 1 முட்டை சாப்பிட்டால் என்ன ஆகும்?

image

முட்டையில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரதச் சத்துகள் உள்ளன. எனவே 1 மாதத்திற்கு தினமும் ஒரு முட்டை வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். ➤மூளை மற்றும் கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ➤முடி வளர்ச்சிக்கு உதவும் ➤சருமம் பளபளப்பாகும் ➤எடையை சீராக பராமரிக்க உதவும் ➤இதயம் ஆரோக்கியமடையும் என டாக்டர்கள் சொல்கின்றனர். அனைவரும் 2026-ல் ஆரோக்கியமாக இருக்க SHARE THIS.

Similar News

News February 8, 2026

ஏழை எளிய மக்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு

image

தமிழகத்தில் ஆட்சேபனையற்ற அரசுப் புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக வசித்து வரும் ஏழை எளிய மக்கள், தங்கள் நிலத்தை வரன்முறைப்படுத்தி பட்டா பெற்றுக்கொள்ள அரசு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. சென்னை போன்ற மாநகரங்களை ஒட்டியுள்ள ‘பெல்ட் ஏரியா’ எனப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களின் நில ஆவணங்களுடன் உரிய வருவாய்த் துறை அலுவலகங்களை அணுகி, பிப்.28-க்குள் விண்ணப்பித்து, நில உரிமையை பெற்றுக்கொள்ளலாம்.

News February 8, 2026

இந்திய அணி வரலாறு படைக்கிறது

image

அமெரிக்காவை வென்றதன் மூலம், T20 WC-ல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற வரலாற்று சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது. 2024 முதல் தொடர்ச்சியாக 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், தெ.ஆப்.,வை (2024-ல் 8 வெற்றிகள்) முந்தியுள்ளது. ஒருநாள், T20 போட்டிகள் உட்பட WC-ல் ஒட்டுமொத்தமாக 100 வெற்றிகளை இந்திய அணி நிறைவு செய்துள்ளது. ஆஸி.,க்கு பிறகு (108) இந்த சாதனையை எட்டிய 2-வது அணி இந்தியா.

News February 8, 2026

திமுக கூட்டணியில் VCK தொடர்கிறது: திருமா

image

கடந்த 2 நாள்களாக அரசியலில் விவாதப்பொருளாக இருப்பது திமுக கூட்டணிக்குள் PMK (ராமதாஸ்) VCK வெளியேறும் என்பதுதான். இதை மையப்படுத்தி விசிகவினரும், பாமகவினரும் சோஷியல் மீடியாவில் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் விசிக தொடருவதாகவும், திருபுவாதங்களுக்கும், அவதூறுகளுக்கும் இடம் தரும் வகையில் விசிகவினர் கருத்துகள் அமைந்துவிடக்கூடாது எனவும் திருமா அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!