News November 16, 2025

தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் இவ்வளவு நன்மைகளா!

image

மாறிவரும் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப, நமது உடல்நலப் பிரச்னைகளும் மாறிவருகிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தை பேண, நமது உணவு முறைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. அந்தவகையில், உடல் நலத்தை மேம்படுத்தும் உணவு வகைகளை நாம் தொடர்ந்து வழங்கி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, இன்று பீட்ரூட்டின் நன்மைகளை தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.

Similar News

News November 16, 2025

ஆஸ்கருக்குள் நுழைந்த தமிழ் படம்

image

ஆஸ்கர் 2026 திரையிடலுக்கு, ‘கெவி’ படம் தேர்வாகியுள்ளது. அடிப்படை வசதிகளற்ற மலைவாழ் கிராமத்தினரின் வாழ்க்கையில் உள்ள அரசியல், ஆதிக்கம், வாழ்வாதார போராட்டம் ஆகியவற்றை மிகவும் உணர்வுப்பூர்வமாக இப்படம் வெளிப்படுத்தியது. இப்படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. <<18297184>>பா.ரஞ்சித்<<>> தயாரித்த ‘தலித் சுப்பையா: வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்’ ஆவணப்படமும் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

News November 16, 2025

திமுகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

திமுக கூட்டணியில் தமிழ் புலிகள் கட்சி இணைவதாக அக்கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டை பாதுகாக்க திமுகவுடன் கைகோர்ப்பதாகவும், 2026 தேர்தலில் 5 தொகுதிகளுக்கு மேல் கேட்போம் எனவும் கூறியுள்ளார். மேலும், தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஜன.3-ம் தேதி ஈரோட்டில் நடக்கவிருக்கும் ‘வெல்லும் தமிழ்நாடு’ மாநாட்டில் உதயநிதி பங்கேற்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 16, 2025

நீட் விலக்கு மசோதா: தமிழக அரசு SC-ல் மனு

image

2021-ல் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை, 2022-ல் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு கவர்னர் அனுப்பி வைத்தார். இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இதற்கு ஒப்புதல் வழங்க ஜனாதிபதி மறுத்தார். இந்நிலையில், நிராகரித்ததற்கான காரணம் தெரிவிக்காமல், சுமார் 1,400 நாள்களுக்கும் மேலாக ஜனாதிபதி ஒப்புதல் வழங்காமல் உள்ளதாக கூறி, இதற்கான ஒப்புதலை SC-யே வழங்க கோரி தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது.

error: Content is protected !!