News October 29, 2025
திண்டுக்கல்: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்!

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது https://www.sancharsaathi.gov.in/ என்ற இணையதளத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News October 29, 2025
திண்டுக்கல்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
JUST IN: நத்தம் அருகே கார் மோதி கணவன்-மனைவி பலி!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோசுகுறிச்சி-கும்பச்சாலை பகுதியில் இன்று அதிகாலை மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதியதில் சாலையில் நடந்து சென்ற கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் போலீசார் இருவரின் உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 29, 2025
திண்டுக்கல் காவல்துறையினர் எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர் சமூக வலைதளங்கள் வழியாக பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி, பங்கு சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் இணைய இணைப்புகளை நம்பி ஏமாறாதீர்கள் என்று எச்சரித்தனர். சந்தேகமான தகவல்கள் வந்தால் 1930 எண்ணிற்கு அளிக்கவும் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டனர்.


