News March 18, 2025
திண்டுக்கல்: EPS 9 ஓய்வூதியத்தை உயர்த்த ஆர்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பாக EPS 95 ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து குறைந்தபட்சம் 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் இன்று(மார்ச் 18) நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் தவமணி தொடங்கி வைக்க மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
Similar News
News August 5, 2025
திண்டுக்கல்லில் கைத்தறி கண்காட்சி ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல்லில் தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு, சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை திண்டுக்கல் மாநகர் பாரதிபுரம் அருட்பெருஞ்ஜோதி எஸ்எஸ்கே(SSK) விஜயலட்சுமி மஹாலில் 07.08.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த கைத்தறி கண்காட்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 4, 2025
தமிழ் செம்மல் விருது மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து 2025-ம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுக்கு www.tamilvalarchiturai.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல் தொலைபேசி எண் 0451-2461585 என்ற முகவரிக்கு நேரில் (அ) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்துக் கொள்ளலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தெரிவிப்பு.
News August 4, 2025
திண்டுக்கல்: ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பனிக்க <