News November 25, 2025
திண்டுக்கல்: B.E/B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

திண்டுக்கல் மக்களே, இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sailcareers.com/sail2025mt/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். டிச.5ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!
Similar News
News November 28, 2025
திண்டுக்கல்: வாட்ஸ் ஆப் இருக்கா? சூப்பர் தகவல்

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 28, 2025
திண்டுக்கல்: பெண்ணிடம் அத்துமீற முயன்ற வாலிபர்!

திண்டுக்கல், கொடைக்கானல் 5வது தெருவை சேர்ந்தவர் மதன்குமார். திருமணமான இவருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில், கடந்த 1-ம் தேதி இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நவீனை தேடிவந்தனர். இந்நிலையில் தேனி மாவட்டம், போடி பகுதியில் பதுங்கியிருந்த நவீனை போலீசார் கைது செய்தனர்.
News November 28, 2025
வேடசந்தூர் அருகே பரபரப்பு.. சிக்கிய நபர்!

வேடசந்தூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி மனைவி மருதாயம்மாள். இவரது வீட்டில் கடந்த 13-ம் தேதி மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்து, தங்க செயின் திருடி சென்றது தொடர்பாக, வேடசந்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, சிவகங்கையை சேர்ந்த செந்தில்குமார் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


