News September 15, 2025
திண்டுக்கல்: 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்

திண்டுக்கல்: சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து, கர்ப்பமாக்கி குழந்தை அச்சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீசார் விசாரித்து சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிபட்டியை சேர்ந்த பாண்டி(36) என்பவரை போக்சோவில் கைது செய்தனர்
Similar News
News September 15, 2025
திண்டுக்கல்: ரயில்வே துறையில் வேலை!

திண்டுக்கல் மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 15, 2025
திண்டுக்கல்லில் பயங்கர விபத்து!

திண்டுக்கல்: மலேசிய வாழ் தமிழர்கள் 10க்கும் மேற்பட்டோர் நேற்று(செப்.14) பழனி தண்டாயுதபாணி மலைக்கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு கொடைக்கானல் நோக்கி சுற்றுலா வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பேத்துப்பாறை அருகே வெள்ளைப்பாறை பகுதியில் வந்தபோது திடீரென கட்டுப்பாடை இழந்த வேன், இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் 12 பேர் படுகாயமடைந்தனர்.
News September 15, 2025
வத்தலக்குண்டில் 4.5 கிலோ கஞ்சா பறிமுதல்: வியாபாரி கைது

வத்தலக்குண்டு காந்திநகர் பகுதியில் ரோந்து சென்ற போலீசார், கஞ்சா வியாபாரியான லட்சுமிநாராயணன் (42) என்பவரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இவர் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை வாங்கி, பின் பேருந்து மூலம் வத்தலகுண்டுக்கு கொண்டுவந்து விற்பனை செய்வது தெரியவந்தது. அவரிடமிருந்து 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.