News April 1, 2024

திண்டுக்கல்: வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

image

மக்களவை தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தேர்தல் பொது பார்வையாளர் பிரபுலிங் கவாலிகட்டி , தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர் ஜரோன்தே விஷால் தஷ்ரத் , காவல்துறை பார்வையாளர் மனோஜ்குமார் கலந்து கொண்டனர்.

Similar News

News February 4, 2026

சாணார்பட்டி அருகே பயங்கரம்: ஒருவர் பலி

image

சாணார்பட்டி அருகே பெட்ரோல் பங்க் பகுதியில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் சாணார்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி (60) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த சாணார்பட்டி காவல் ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றினர். பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

News February 4, 2026

மக்களை ஏமாற்றும் ஈபிஎஸ் – அமைச்சர் பெரியசாமி தாக்கு!

image

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “10 ஆண்டுகளில் எடப்பாடி பழனிச்சாமி கல்வி கடனை ஏன் ரத்து செய்யவில்லை?. மத்தியில் இருக்கும் மோடி அரசு கல்விக்கான நிதியை ஒதுக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார். தன்னை பாதுகாத்து கொள்வதற்காகத்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்” என கடுமையாக சாடினார்.

News February 4, 2026

திண்டுக்கல்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

திண்டுக்கல் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!