News January 17, 2026
திண்டுக்கல்: வீட்டில் ஹீட்டர் தீ விபத்து !

திண்டுக்கல் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பாப்பாத்தி வீட்டில் விக்னேஷ் தம்பதியர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், இரவு 7 மணியளவில் குளியலறை ஹீட்டரில் அதிக மின்சாரம் காரணமாக தீப்பிடித்தது. அக்கம் பக்கத்தினர் தகவலால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.வாஷிங் மெஷின் உள்ளிட்ட சில வீட்டு உபகரணங்கள் எரிந்து நாசமாகின.
Similar News
News January 27, 2026
திண்டுக்கல்: பிறப்பு, இறப்பு சான்று வேண்டுமா?

திண்டுக்கல் மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். (SHARE பண்ணுங்க)
News January 27, 2026
திண்டுக்கல்: 12th போதும்.. சூப்பர்வைசர் வேலை!

ஆதார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு
1) பதவிகள்: சூப்பர்வைசர், ஆபரேட்டர் (மொத்தம் 282 இடங்கள்)
2) கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3) வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
4) மாதச் சம்பளம்: ₹20,000/-
5) கடைசி தேதி: ஜனவரி 31, 2026.
6) விண்ணப்பிக்க<
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க
News January 27, 2026
வடமதுரை அருகே கொள்ளை

வடமதுரை, தென்னம்பட்டி சாலையோரத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள உண்டியலை நேற்று முன்தினம் இரவில் உடைத்து உள்ளே இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். உண்டியலில் ரூ.60 ஆயிரத்திற்கும் மேல் பணம் இருந்திருக்கலாம் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


