News February 19, 2025

திண்டுக்கல்: வாலிபருக்கு 50 ஆண்டு சிறை

image

நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த நத்தத்தை சேர்ந்த தர்மராஜ் (24) என்பவரை நத்தம் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று நீதிபதி தர்மராஜுக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Similar News

News August 14, 2025

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திண்டுக்கல்: நாக்பூர் தீக்ஷா பூமியில் நடைபெறும் தம்ம சக்கர பரிவர்த்தன திருவிழாவிற்கு செல்லவுள்ள 150 தமிழ்நாட்டு பௌத்தர்களுக்கு தலா ரூ.5000 மானியம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், www.bcmbcmw.tn.gov.in இணையதளத்திலும் கிடைக்கும். விண்ணப்பங்களை ஆவணங்களுடன் நவ.30க்குள் சென்னை சேப்பாக்கம் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 14, 2025

திண்டுக்கல்: வங்கியில் வேலை! ரூ.72,000 சம்பளம்

image

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில்(TMB)Probationary Officer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆக.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு ரூ.72,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. (SHARE IT)

News August 14, 2025

திண்டுக்கல்: ’ஆக.15’ கலெக்டர் எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் ஓட்டல்களுடன் கூடிய பார்கள் என அனைத்துக் கடைகளும் நாளை(ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படுகிறது. இந்நிலையில், நாளை சட்டவிரோதமாக ஏதேனும் மது பான விற்பனையை கண்டால் உடனே 10581-ஐ அணுகி புகார் அளிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!