News August 21, 2025

திண்டுக்கல்: வாட்ஸ்அப்பில் சிலிண்டர் புக்கிங் செய்யலாம்!

image

மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News August 21, 2025

திண்டுக்கல்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாரத்திற்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (ஆகஸ்ட் 22) செட்டியபட்டி நாடக மேடை திடலில், காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டை திருத்தம், விண்ணப்பம் உள்ளிட்ட அரசு திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். இதில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள் கோரிக்கைக்கு உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம்.

News August 21, 2025

திண்டுக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் வரும் 3ம் தேதி மாவட்ட அளவில் பேச்சு போட்டி நடக்கிறது. இந்த போட்டிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

News August 21, 2025

கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 9 பேர் கைது!

image

நத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நத்தம், செட்டிகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நத்தத்தை சேர்ந்த செல்வபிரகாஷ்(23), அஜித்மீரான்(28), உட்பட 9 பேர் கைது, 1 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள், 1 எடை மெஷின் பறிமுதல் செய்து நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!