News January 17, 2026
திண்டுக்கல்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

திண்டுக்கல் வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம்.ஷேர்!
Similar News
News February 8, 2026
திண்டுக்கல்லில் டிரைவர் தற்கொலை

திண்டுக்கல் குமரன் நகரை சேர்ந்த ஜெயராம். இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் நடத்தி வருகிறார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்து திண்டுக்கல் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறனர்.
News February 8, 2026
பழனியில் பெண் கொலை: 2 பேர் கைது

பழனி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். இவருடைய மனைவி கீதா (25). கடந்த 3-ம் தேதி கீதா தனது வீட்டின் முன்பு மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஹெலன்ஷிபா, மணிகண்டன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
News February 8, 2026
திண்டுக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.


