News September 19, 2025
திண்டுக்கல்: லஞ்சம் கேட்டால் உடனே CALL!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspdgldvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது என்ற 0451-2461828 எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 19, 2025
திண்டுக்கல்: டிகிரி முடித்தால் ரூ.45,000 சம்பளம்!

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு குழந்தைகள் நலத்துறையில் காலியாக உள்ள 12 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.45,000 வரை சம்பளம் வழங்கப்படும். வருகிற அக்.3ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News September 19, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திண்டுக்கல்: ஆத்தூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடங்களையும், நிலக்கோட்டை தாலுகாவில் புதிதாக கட்டுப்பட்டு வரும் கனவு இல்ல திட்டத்தினையும், ஆத்தூர் நிலக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தையும் அதில் வழங்கப்படும் உணவின் தரத்தை குறித்து இன்று(செப்.19) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் ஆய்வு செய்தார்.
News September 19, 2025
திண்டுக்கல் உழவர் சந்தை விலை நிலவரம்

திண்டுக்கல் உழவர் சந்தையில் கத்திரிக்காய் ரூ.60,50,40, தக்காளி ரூ.24,20, வெண்டைக்காய் ரூ.36, 20, புடலங்காய் ரூ.50,30, பாகற்காய் ரூ.50,40, பீர்க்கங்காய் ரூ.60,50, சுரைக்காய் ரூ.25, 20, பூசணிக்காய் ரூ.30,25, மொச்சை ரூ.70, அவரைக்காய் ரூ.70,60, சின்ன வெங்காயம் ரூ.36,30, பச்சை மிளகாய் ரூ.80, 70, முருங்கைக்காய் ரூ.100,80, பெரிய வெங்காயம் ரூ.30, 25 என விற்பனையானது.