News December 19, 2025
திண்டுக்கல்: ரூ.60,000 சம்பளத்தில் வங்கியில் வேலை!

திண்டுக்கல் மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 514 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any degree.
3. கடைசி தேதி : 05.01.2026
4. சம்பளம்: ரூ.64,820 முதல் 1,20,940 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
6. விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.12.2025. இத்தகவலை SHARE பண்ணுங்க மக்களே!
Similar News
News December 22, 2025
திண்டுக்கல் அருகே வசமாக சிக்கிய நபர்கள்!

வத்தலக்குண்டு, பிலீஸ்புரத்தை சேர்ந்தவர் குருநாதன் 23. பெரியகுளம் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகே தனது ஐபோனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இருவர் அவசரமாக பேச வேண்டுமென அவரது அலைபேசியை வாங்கினர். பேசுவது போல் நடித்து தப்பி ஓடினர். தொழில்நுட்ப உதவியுடன் வத்தலக்குண்டு போலீசார் காந்திநகரை சேர்ந்த ராஜேஷ் 39, விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த கணேசன் 38 ஆகியோரை கைது செய்தனர்.
News December 22, 2025
திண்டுக்கல் அருகே இருவர் தூக்கிட்டு தற்கொலை!

திண்டுக்கல், ம.மு.கோவிலூர் சக்கியம்பட்டியை சேர்ந்தவர் ஓட்டுநர் திருப்பதி. வயற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இவர், விரக்தியில் திண்டுக்கல் பஸ் ஸ்டேண்ட் எதிரே, எம்.ஜி,ஆர் சிலை பின்புறம் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனருடன் இணைக்கப்பட்டிருந்த கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதேபோல், பழனி காமராஜர் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி ரங்கநாதன், குடும்ப பிரச்சனையால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
News December 22, 2025
திண்டுக்கல் மக்களே: இன்று இங்கு மின் தடை!

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.22) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, தாமரைப்பட்டி, வேல்வார்கோட்டை, முத்தனங்கோட்டை, பாளையம், அணியாப்பூர், குஜிலியம்பாறை வடக்கு, பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, அய்யன்கோட்டை, நத்தம், வேலம்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, சேத்தூர், எரியோடு, நாகையகோட்டை, வெல்லம்பட்டி பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது


