News September 19, 2025
திண்டுக்கல்: ரயில் நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்!

திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு இன்று வந்த கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில், ரயில் என்ஜினை அடுத்த முன்பதிவு இல்லா பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது, அதில் 6 கிலோ கஞ்சா இருந்ததை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிகின்றனர்.
Similar News
News September 19, 2025
திண்டுக்கல்: ஆன்லைன் ஷாப்பிங் மோசடி..உஷார்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். விற்பனை அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் மட்டும் பொருட்களை வாங்கவும்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News September 19, 2025
திண்டுக்கல் மாவட்ட தாசில்தார் எண்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டாயம் தெரிய வேண்டிய தாசில்தார் எண்கள்:
1)திண்டுக்கல்(மேற்கு): 9445000579
2)திண்டுக்கல்(கிழக்கு): 9384094522
3)நிலக்கோட்டை:9445000581
4)நத்தம்:9445000580
5)பழனி:9445000582
6)வேடசந்தூர்:9445000584
7)ஒட்டன்சத்திரம்:9445000583
8)கொடைக்கானல்:9445000585
இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 19, 2025
திண்டுக்கல்லில் வைரஸ் காய்ச்சலா? செய்ய வேண்டியவை!

திண்டுக்கல் மக்களே.., வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!