News April 24, 2024
திண்டுக்கல்: ரயிலில் அடிபட்டு பலி

திண்டுக்கல், பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஓய்வு பெற்ற காவலர் மாணிக்கம்(59) என்பவர்; திண்டுக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சரக்கு ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News January 23, 2026
திண்டுக்கல் அருகே மனைவியை வெட்டிய கணவன்!

திண்டுக்கல்: சிறுகுடி- தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் மலையாண்டி(33), தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சிதா (28). மலையாண்டி தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் மது குடித்து வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து ரஞ்சிதா அளித்த புகாரின் பேரில், நத்தம் போலீசார் மலையாண்டியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
News January 23, 2026
திண்டுக்கல்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
News January 23, 2026
திண்டுக்கல்: தவறாக அனுப்பிய Payment-ஐ இனி திரும்ப பெறலாம்

திண்டுக்கல் மக்களே, செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!


