News January 29, 2026
திண்டுக்கல் மேயரின் சஸ்பெண்ட் உத்தரவிற்கு தடை

திண்டுக்கல் மாமன்ற கூட்டத்திற்கு 2 கூட்டத்திற்கு கலந்து கொள்ளக் கூடாது என 14-வது வார்டு பாஜக கவுன்சிலர் தனபாலனை சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அந்த உத்தரவை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற 2 நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இரு நீதிபதி அமர்வு மேயரின் சஸ்பெண்ட் உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
Similar News
News January 29, 2026
திண்டுக்கல்: ஆதாரில் போன் நம்பர் மாற்ற வேண்டுமா? CLICK

திண்டுக்கல் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு<
News January 29, 2026
கொடைக்கானல் அருகே விபத்து:5 பேர் காயம்

மதுரையைச் சேர்ந்த 5 நண்பர்கள், கொடையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகக் காரில் வந்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்து, மீண்டும் அதே காரில் மதுரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கொடைக்கானல் – வத்தலக்குண்டு மலைப்பாதையில் பெருமாள்மலை அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.
News January 29, 2026
திண்டுக்கல்: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!


