News October 30, 2024
திண்டுக்கல் மாவட்ட காவல் துறை விழிப்புணர்வு
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது பண்டிகை காலம் என்பதால், வாகன ஓட்டிகள் ‘மது அருந்தி வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்போம்! விபத்தைத் தடுப்போம்! என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை, திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், ஆலம்பாடி கிராமம், எஸ்.ஜி.கிரானைட்ஸ் பல வண்ண கிரானைட் சுரங்கம் அமைவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடர்பாக பொதுமக்களின் கருத்து கேட்டறியும் கூட்டம் கலெக்டர் தலைமையில் நவ.22 அன்று 11 மணிக்கு ஆலம்பாடி ஊராட்சி, சமுதாயக் கூடத்தில் நடைபெற இருந்தது. இந்நிலையில் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது என ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
திண்டுக்கல்லில் இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்
திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
News November 19, 2024
திண்டுக்கல்: இன்றைய தலைப்பு செய்திகள்
➤சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று ஒருநாள் இலவச அனுமதி ➤பழனி அருகே விபத்து: சிசிடிவி ➤திண்டுக்கல் மாவட்டத்திற்கு மழை அறிவிப்பு ➤திண்டுக்கல்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை ➤வேடசந்தூர் குடகனாறு அணை திறப்பு ➤ 2 லட்சம் கேட்கும் அதிகாரிகள்: குமுறும் பயனாளிகள் ➤வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை ➤வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் ➤விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.