News October 24, 2024

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை 

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு செய்துள்ளது. ATM -ல் பணம் எடுக்க செல்லும் போது முன் பின் தெரியாத நபர்களிடம் ATM – கார்டை கொடுத்து பணம் எடுக்க வேண்டாம். அவர்கள் உங்களை ஏமாற்றி உங்கள் பணத்தை எடுக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பான புகாருக்கு சைபர் கிரைம் உதவி எண்: 1930 மற்றும் இணையதளம் மூலம் www.cybercrime.gov.in தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News February 14, 2026

திண்டுக்கல்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா? CLICK

image

திண்டுக்கல் மக்களே.. அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் நேற்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று (பிப்.13) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் <>இங்கே கிளிக் <<>>செய்து புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். (SHARE)

News February 14, 2026

பழனி அருகே சோகம்!

image

பழனியில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றில் பிரேக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்வதற்காக மெக்கானிக் குமரேசன் என்பவர் அந்தப் பேருந்தின் அடியில் சென்று பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக பேருந்து திடீரென நகர்ந்ததாக கூறப்படுகிறது. நிலைதடுமாறிய பேருந்தின் சக்கரம் குமரேசனின் தலை மீது ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News February 14, 2026

பழனியில் விஜய் பாட்டு.. வலைவீசி தேடும் போலீஸ்

image

பழனி மலைக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், இக்கோயிலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரச்சார பாடல் ஒலித்திருக்கிறது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

error: Content is protected !!