News December 8, 2024

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக விழிப்புணர்வு 

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (‘மது போதையில் பயணம், நொடியில் மரணம் மது அருந்தி வானங்களை இயக்குவதை தவிர்க்கவும்’) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை இன்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. 

Similar News

News March 7, 2026

ஒட்டன்சத்திரம்: தட்டித்தூக்கிய அமைச்சர்!

image

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த பல்வேறு மாற்றுக்கட்சியினர் தங்களது கட்சிகளிலிருந்து விலகி, திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில், அவர்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். கட்சியில் இணைந்தவர்களை அமைச்சர் சக்கரபாணி சால்வை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார்.

News March 7, 2026

கொடைக்கானல்: அடையாளம் தெரியாத எலும்புக்கூடு

image

கொடைக்கானல் கங்கா காம்பவுண்ட் பகுதியில் ஏரிச்சாலையில் இருந்து நீர் வெளியேறும் இடத்தில் பேண்ட் அணிந்த நிலையில் மனித எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு கிடந்தது. தகவலறிந்து வந்த கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் அவற்றை கைப்பற்றி ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 7, 2026

நத்தம் அருகே சோகம்; பெண் பலி

image

நத்தம் அருகே கவரயபட்டியை சேர்ந்தவர் அடைக்கம்மாள் (55). இவர் சம்பவத்தன்று தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வரப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அடைக்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!