News January 22, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான புகார்கள் அல்லது தகவல்கள் இருந்தால், 1098 என்ற அவசர உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
Similar News
News January 23, 2026
திண்டுக்கல் அருகே மனைவியை வெட்டிய கணவன்!

திண்டுக்கல்: சிறுகுடி- தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் மலையாண்டி(33), தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சிதா (28). மலையாண்டி தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் மது குடித்து வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து ரஞ்சிதா அளித்த புகாரின் பேரில், நத்தம் போலீசார் மலையாண்டியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
News January 23, 2026
திண்டுக்கல்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
News January 23, 2026
திண்டுக்கல்: தவறாக அனுப்பிய Payment-ஐ இனி திரும்ப பெறலாம்

திண்டுக்கல் மக்களே, செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!


