News January 3, 2026

திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.02) தலைக்கவசம் அணிந்து செல்வோம். பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம். தலைக்கவசம் நம் உயிர்கவசம்! என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News January 5, 2026

திண்டுக்கல்லில் இப்பகுதியில் மின்தடை

image

திண்டுக்கல்லில் இன்று(ஜன.5) மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பிள்ளையார்நத்தம், என்.பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்துநகர், ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, தோமையார்புரம், மில்ஸ்காலனி, குட்டியபட்டி பிரிவு, அனுமந்தராயன்கோட்டை, கொடைரோடு, அம்மையநாயக்கனூர், குல்லலக்குண்டு, கந்தப்பக்கோட்டை பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News January 5, 2026

திண்டுக்கல்லில் சேவல் கண்காட்சி

image

திண்டுக்கல், குட்டியப்பட்டியில் உலக அளவிலான சேவல் கண்காட்சி நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேவல் வளர்ப்பாளர்கள் கலந்து சேவல்களை காட்சிப்படுத்தினர். இதில், சிறந்த சேவல்களுக்கு எல்.இ.டி., டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்சி, கிரைண்டர் என 100 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News January 5, 2026

திண்டுக்கல் அருகே கோர விபத்து; ஒருவர் பலி

image

திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில், தாடிக்கொம்பு அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் திருப்பூர் சேர்ந்த சேகர் (55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் பாண்டித்துரை படுகாயமடைந்து திண்டுக்கல் GH-ல் சிகிச்சை உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!