News June 4, 2024
திண்டுக்கல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி

2024 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட திமுக – சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 634729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக – எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக் 214134 வாக்குகளும், பாஜக – பாமக வேட்பாளர் திலகபாமா 105898 வாக்குகளும், நாதக வேட்பாளர் கயிலைராஜன் 93265 வாக்குகளும் பெற்று தோல்வியைத் தழுவினர்.
Similar News
News September 13, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்புகொள்வதற்கான உதவிப் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் tonight ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல் அதிகாரிகளின் விபரங்கள் உட்பட தேவையான தகவல்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது.
News September 12, 2025
திண்டுக்கல்: பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்!

திண்டுக்கல்: வேடசந்தூரைச் சேர்ந்த கார்த்திக் ஓராண்டிற்கு முன்பாக கன்னியாகுமரி, கருங்கல் அருகே பாலூர் காட்டுவிளை என்ற பகுதியை சேர்ந்த ஜெய அன்னாள்(20) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். கடந்த 40 நாட்களுக்கு முன்பாக குழந்தை பிறந்ததிலிருந்தே கணவர் தன்னுடன் பேசுவதில்லை என்பதற்காக குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து கொலை செய்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
News September 12, 2025
திண்டுக்கல்: இலவச பயிற்சியுடன் வேலை வாய்ப்பு!

திண்டுக்கல் மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு இலவசமாக வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சி 3 மாதம் வழங்கபடவுள்ளது. இப்பயிற்சியை முழுமையாக முடிப்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்<