News October 26, 2025
திண்டுக்கல் மாநகராட்சி வார்டு சிறப்பு கூட்டம்

திண்டுக்கல் மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகின்ற அக்.27 மற்றும் 29 ஆகிய நாட்களில் வார்டு சிறப்பு கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Similar News
News February 3, 2026
திண்டுக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

திண்டுக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News February 3, 2026
VIRAL: வத்தலக்குண்டு அருகே அதிசயம்

வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த விவசாயி ரஞ்சித், கடந்த 20 ஆண்டுகளாக மாட்டுப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது பண்ணையில் உள்ள பசு அண்மையில் கன்று ஈன்றது. அப்பசுங்கன்று 6 கால்களுடன் பிறந்துள்ளது. 6 கால்களுடன் இருந்தாலும், மற்ற சாதாரண கன்றுகளை போலவே இதுவும் மிகுந்த ஆரோக்கியத்துடன் வளர்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த அதிசய கன்றை ஊர் மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.
News February 3, 2026
பழனி அருகே விபத்து: ஒருவர் பலி

பழனி, பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பழனி நோக்கிச் சென்றபோது, எதிரே வந்த டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


