News July 5, 2025
திண்டுக்கல் மாணவர்கள் கவனத்திற்கு

திண்டுக்கல்: தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என முன்னாள் முதலமைச்சர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் தேதி ’தமிழ்நாடு நாள்’. இதை முன்னிட்டு, மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் ஜூலை 10ஆம் தேதி காலை 9.30 மணி முதல் எம்.எஸ்.பி. சோலை நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 5, 2025
திண்டுக்கல்: 4,6,6,6,6,6 விளாசிய விமல்!

திண்டுக்கல்: நத்தம் பகுதியில் நேற்று(ஜூலை 4) இரவு நடைபெற்ற தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சென்னை அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் திண்டுக்கல் அணி சென்னை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மேலும் இந்த போட்டியில் சென்னை டிராகன்ஸ் வீரர் விமல் குமார் போட்டியின் 17ஆவது ஓவரில் 4,6,6,6,6,6 என 34 ரன்கள் விலாசி சாதனை படைத்தார்.
News July 5, 2025
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி!

TNPL போட்டியில் நேற்று(ஜூலை 4) நடைபெற்ற திண்டுக்கல் – சேப்பாக்கம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர், இதையடுத்து நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் திருப்பூர் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் எதிர்கொள்ள உள்ளனர்.
News July 5, 2025
திண்டுக்கல்: வீடு வாங்க ரூ.75 லட்சம் கடனுதவி!

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மூலம் வீடு வாங்க, கட்ட, நீட்டிக்க, பராமத்துப் பணிகள் செய்ய கடனுதவி வழங்கப்படுகிறது. ரூ.75,00,000 வரை வழங்கப்படும் இந்தக் கடன் தொகையை 20 ஆண்டுகளுக்குள் செலுத்தி முடிக்கலாம். உங்களின் CIBIL score அடிப்படையில் வட்டி விகீதம் நிர்ணயிக்கப்படும். இதற்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்து கொள்ளலாம். அல்லது 0451-2433153ஐ அழைக்கவும். மேலும், தெரிந்து கொள்ள <<16949453>>கிளிக்.<<>> (SHARE IT)