News October 17, 2025
திண்டுக்கல்: மருமகனை கொன்ற மாமனார்!

திண்டுக்கல்: எரியோடு பண்ணப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் சௌபரணி புதுக்கோட்டையைச் சேர்ந்த கௌதம் என்பவரை 2021-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சம்பவத்தன்று மாமனார் சரவணன், அவரது நண்பர் வேலுச்சாமி ஆகியோர் சீலப்பாடி அருகே காரில் வரும்போது மருமகன் கௌதம் கீழே தவறி விழுந்து விபத்தில் இறந்ததாக சொல்லப்பட்ட நிலையில், போலீஸ் விசாரணையில் மாமானாரே தள்ளி விட்டு கொன்றது தெரிய வந்தது.
Similar News
News October 18, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ரோந்து விவரம்

திண்டுக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுப்புறமான ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள தேவையான உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏதேனும் புகார் இருந்தால் அதிகாரிகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.
News October 17, 2025
திண்டுக்கல் காவல்துறையின் விழிப்புணர்வு புகைப்படம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் (அக்டோபர் 17) இன்று, மழைக்கால சாலை பாதுகாப்பை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டது. “மழைக்காலத்தில் வாகனங்களை மெதுவாக, கவனமாக இயக்கி பாதுகாப்பாக பயணிப்போம்” என்ற வாசகத்துடன் வெளியான இந்த பதிவு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
News October 17, 2025
திண்டுக்கல்: நாளை கடைசி நாள்! மிஸ் பண்ணிடாதீங்க!

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்(TNSTC) காலியாக உள்ள அப்பரண்டீஸ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1588 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க <