News May 6, 2024
திண்டுக்கல், மனதை மயக்கும் மன்னவனூர் ஏரி!

திண்டுக்கலில் கொடைக்கானலைப் போல் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ரகசிய பூம்பாறை உள்ளது. அந்த அடந்த காடுகள் நிறைந்த கிராமத்தில் ஒரு மலையேற்றப்பாதையின் முடிவில் மன்னவனூர் ஏரி அமைந்துள்ளது. இந்த நன்னீர் ஏரி மலைகள் சூழ்ந்த பரந்த இடத்தில் இருக்கும். பிக்னிக் செல்ல அருமையான இட அமைப்பைக் கொண்டுள்ளது. பசுமை நிறைந்த மன்னவனூர் கிராமத்தில் அழகு அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும்.
Similar News
News July 5, 2025
திண்டுக்கல்லில் இன்று மின் தடை அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(ஜூலை 5) ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி, தங்கச்சியாம்பட்டி, புலியூர்நத்தம், லெக்கையன் கோட்டை, வடகாடு மலைக்கிராமங்கள், அம்பிளிக்கை ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மதியம் 3:00 வரையிலும், கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, வில்பட்டி, தாண்டிக்குடி, பெருமாள்மலை ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மதியம் 2:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினருக்கு SHARE!
News July 5, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திண்டுக்கல் பெருமாள்கோவில்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில், காலியாக உள்ள ஒரு பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு,
தற்காலிக தொகுப்பூதியத்தில், பணிபுரிய விருப்பமுள்ள நபர்கள், உரிய கல்விச்சான்றுகளுடன், விண்ணப்பங்களை திண்டுக்கல் ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ (அ) தபால் மூலமாகவோ வரும் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறியுள்ளார்.
News July 4, 2025
திண்டுக்கல்லில் இரவு ரோந்து காவலர்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்& அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.