News April 7, 2024
திண்டுக்கல்: மது விற்ற 6 பேர் கைது

திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரபாண்டியன், இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சப்- இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், போலீசார் பிரதீபன், தங்கப்பாண்டி, ஜோசப் மெரின் , மணிகண்டன் திண்டுக்கல், நிலக்கோட்டை, மைக்கேல் பாளையம், கோபால்பட்டி, அய்யலூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சட்ட விரோதமாக மது விற்ற 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 55 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 9, 2026
திண்டுக்கல்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<
News March 9, 2026
விஜய் வாக்குறுதி: திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்!

அதிமுக மகளிரணி சார்பில் நத்தம் ரோடு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், மகளிர் உரிமைத்தொகையை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து தான் வழங்கினார். தற்போது கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய் தேர்தலுக்காக புதிய வாக்குறுதிகளை வெளியிடுகிறார் அதையெல்லாம் நீங்கள் நம்ப வேண்டாம்.தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்
News March 9, 2026
ஆயக்குடி அருகே சிறுவன் பரிதாப பலி

பழனி அருகே ஆயக்குடி பகுதியில் உள்ள சின்னாம்பாறையில் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இருந்து சிறுவனின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


