News April 18, 2024

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி 2024!

image

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் 6சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. தொகுதியில் 1812 வாக்குப்பதிவு மையங்கள், 16,07,051 வாக்காளர்கள், 7,411 வாக்குச்சாவடிகள், 137 பதட்டமான வாக்குச்சாவடிகள், 39 மிகப் பதட்டமான வாக்குச்சாவடிகள், 1,812 வாக்குப்பதிவு இயந்திரங்கள்
1,812 கட்டுப்பாட்டு கருவிகள்,
1,812 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரம் உள்ளன

Similar News

News November 20, 2024

திண்டுக்கல்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (அவசர ஊர்திக்கு வழி விடுவோம், உயிரை காப்போம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News November 20, 2024

திண்டுக்கல்: மாடு வளர்ப்பாளர்களுக்கு கவனத்திற்கு

image

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் (ம) வாகன ஓட்டிகளுக்கு தொல்லை தரும் வண்ணம் மாடுகளை சாலைகளில் திரிய விட்டால் மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். முதல் முறை பிடிபட்டால் மாடு ஒன்றிற்கு ரூ.2000மும், 2ஆம் முறை ரூ.5000மும் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் திரிய விட்டால் மாடுகள் திருப்பி வழங்கப்படாது என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

40 நாட்களுக்குப் பிறகு ரோப்கார் சேவை துவக்கம்

image

ஆறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மலைக்கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்ய ரோப்கார் மூலமாக பக்தர்கள் செல்வார்கள். 40 நாட்கள் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து, தற்போது சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் ரோப்கார் சேவை துவக்கப்பட்டது.