News March 19, 2024
திண்டுக்கல்: நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக இன்று 19.03.2024- வழக்கறிஞர் சங்க துணை தலைவர் குமரேசன் அவர்கள் தலைமையில், செயலாளர் உதயகுமார் அவர்கள் முன்னிலையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து உறுப்பினர்களின் கருத்தை கேட்ட பின்பு நாளை 20.03.2024- நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நடத்த ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Similar News
News October 26, 2025
திண்டுக்கல்லில் இறைச்சி விலை நிலவரம்!

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மார்க்கெட்டில் இன்றைய(அக்டோபர் 26) இறைச்சி விலை நிலவரம் (1 கிலோவிற்கு) ஆட்டிறைச்சி – (890 முதல் 950), பிராய்லர் கோழி – (200 முதல் 260), நாட்டுக்கோழி – 600, வஞ்சரம் மீன் – 800
கட்லா மீன் – 220, பாறை மீன் – 600,நெத்திலி மீன் – 250, மத்தி மீன் – 200,
ஜிலேபி மீன் – 200, முட்டை (1 க்கு) 5.25, நாட்டுக்கோழி முட்டை – 10 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News October 26, 2025
திண்டுக்கல்: சிலிண்டர் மானியம் வருகிறதா?

சிலிண்டர் மானியம் சரியாகக் கிடைக்கிறதா என்பதை அறிய முதலில் www.mylpg.in என்ற இணையதளத்திற்கு சென்று நீங்கள் பயன்படுத்தும் HP Gas, Indane, அல்லது Bharatgas ஆகிய சிலிண்டர் நிறுவனத்தின் Logoவை கிளிக் செய்யவும். பின்னர் உங்களின் மொபைல் எண் அல்லது LPG ஐடியை உள்ளிடவும். இதன்பிறகு,மானியம் தொடர்பான விவரங்களும் தோன்றும். மானியம் வரவில்லை என்றால் pgportal.gov.in என்ற இணையதளத்தில் புகாரளிகலாம்.SHARE பண்ணுங்க
News October 26, 2025
திண்டுக்கல்லில் மது போதையில் பெண் ரகளை!

திண்டுக்கல் மாநகரில் உள்ள பாண்டியன் நகரில் அரசு டாஸ்மாக் பார் உள்ளது இங்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மது அருந்திவிட்டு பின் பாரில் இருந்தவர்களிடம் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் தெற்கு காவல்நிலைய பெண் போலீசார் அவரை கண்டித்து அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


