News June 16, 2024

திண்டுக்கல்: நில அளவைக்கு இணையதளம்

image

தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை https://tnlandsurvey.tn.gov.in இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது. இதில், பட்டா மாறுதல் “தமிழ் நிலம்” கைப்பேசி செயலி இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் மூலம் விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 1, 2026

திண்டுக்கல்: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

image

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

News March 1, 2026

திண்டுக்கல்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

பழனி கோயில் நேரத்தில் மாற்றம்!

image

மார்ச் 3-ஆம் தேதி சந்திரகிரகணத்தை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நண்பகல் 1 மணி முதல் நடை அடைக்கப்படும். அன்றைய தினம் காலை 10:30 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். கிரகணம் முடிந்து இரவு 7 மணிக்கு மேல் பரிகார பூஜைகள் மற்றும் தங்க ரதப் புறப்பாடு நடைபெறும். மறுநாள் மார்ச் 4 முதல் பக்தர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

error: Content is protected !!