News March 23, 2026
திண்டுக்கல்: தேர்தல் வந்தாச்சு- சீக்கிரம் CHECK பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
Similar News
News April 6, 2026
திண்டுக்கல்: WhatsApp ல் இலவச வக்கீல் சேவை

திண்டுக்கல் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News April 6, 2026
திண்டுக்கல்: இனி Gpay, Phonepe தேவையில்லை..!

திண்டுக்கல் மக்களே, Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News April 6, 2026
திண்டுக்கல் கலெக்டர் GH-ல் சிகிச்சை!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், கடந்த சில மாதங்களாக அடி வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் சிறுநீரகத்தில் கல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவக் குழு அறுவை சிகிச்சை செய்து கல்லை அகற்றியது. தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.


