News March 25, 2026
திண்டுக்கல்: “தமிழ்நாட்டை ஆள முடியாது”

திண்டுக்கல் புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுபநிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட கலைஞர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, டெல்லியில் ஆட்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அது அமித் ஷாவாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி. இந்திய அளவில் பாஜக ஆளும் மாநிலங்களில் தான் அதிகமான பாலியல் குற்றங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார்.
Similar News
News April 5, 2026
திண்டுக்கல்: சாலை விபத்தில் இளைஞர் சம்பவ இடத்தில் பலி!

சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (26). டாக்டரான இவர் கிளினிக் நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் சின்னாளப்பட்டி நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். தோமையார்புரம் அருகே சென்றபோது, மதுரை நோக்கி சென்ற லாரியின் பின்பகுதியில் சதீஷ்குமார் டூவீலர் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலூகா போலீசார் விசாரனை.
News April 5, 2026
ELECTION திண்டுக்கல்: ஒரே நாளில் இத்தனை பேரா?

திண்டுக்கல் மாவட்டம் 7 சட்டமன்றத் தொகுதிகளில் நேற்று 68 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 58 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள். மொத்தமாக இதுவரை 99 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 83 பேர் ஆண்கள், 16 பேர் பெண்கள். அதிகபட்சமாக நத்தம் தொகுதியில் 25 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நிலக்கோட்டை தொகுதியில் 5 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர்.