News December 17, 2025

திண்டுக்கல் டூ சபரிமலைக்கு ரயில் வழித்தடம்?

image

தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர். இந்நிலையில், தமிழக பக்தர்கள் பயன்பெறும் வகையில், திண்டுக்கலில் இருந்து சபரிமலைக்கு ரயில் தடம் அமைக்க வேண்டும் என்று தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் மக்களவையில் கோரிக்கை விடுத்தார். உடனே மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இக்கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News

News December 18, 2025

NOTAM என்றால் என்னன்னு தெரியுமா?

image

வங்கக்கடலில் <<18600837>>இந்தியா NOTAM<<>> அறிவிப்பை வெளியிட்டுள்ளது. NOTAM என்றால் Notice to Airmen. அதாவது, குறிப்பிட்ட வான்வெளி பகுதியில் சிவில் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்படும் தடை. இதன் மூலம் அப்பகுதியில் சிவில் விமானங்கள் பறக்க முடியாது. ராணுவ சோதனைகள், நடவடிக்கைகள், ஆபத்து காலங்களில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. பாக்., உடனான முந்தைய பதட்டங்களின்போதும் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

News December 18, 2025

ஏவுகணை சோதனைக்கு தயாராகிறதா இந்தியா?

image

இந்திய பாதுகாப்புத்துறை அறிவுறுத்தலின் பேரில் AAI, டிச.22-டிச.24 வரை வங்கக்கடல் பகுதியில் NOTAM (குறிப்பிட்ட பகுதியில் சிவில் விமான போக்குவரத்துக்கு தடை) எச்சரிக்கை விடுத்துள்ளது. விசாகப்பட்டினம் அருகே, வங்கக்கடல் பகுதியில் சுமார் 3,240 கிமீ தூரத்திற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா மிகப்பெரிய ஏவுகணை சோதனையில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News December 18, 2025

மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை

image

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கியதால், நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹12,440-க்கும், சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹99,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹400, இன்று ₹320 என 2 நாளில் ₹720 அதிகரித்துள்ளது.

error: Content is protected !!