News March 26, 2025

திண்டுக்கல்: டீசல் ஊற்றி தொழிலதிபர் எரித்துக் கொலை

image

கொடைக்கானலில் மறுவாழ்வு மைய நண்பர்கள் காட்டேஜ் உரிமையாளரை எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைதானார். 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் சிவராஜ் (60). இவர் அங்குள்ள பெரும்பள்ளம் பகுதியில் சொந்தமாக காட்டேஜ் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு 2 மனைவிகள், 3 பிள்ளைகள் உள்ளனர்.

Similar News

News October 29, 2025

திண்டுக்கல் மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு 11 மணி முதல் புதன்கிழமை நாளை காலை 6 மணி வரை, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 28, 2025

திண்டுக்கல்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களின் குறைகளை நேரில் கேட்டு தீர்க்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை பழனி நகராட்சியில் தேவாங்கர் மண்டபம், ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி முத்துநாயக்கன்பட்டி, சாணார்பட்டி வட்டாரத்தில் சமுதாய கூடம் அதிகாரிபட்டி மற்றும் வடமதுரை வட்டாரத்தில் ஊர்மந்தை கொல்லப்பட்டி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

News October 28, 2025

திண்டுக்கல்: கேன் தண்ணீர் பயன்படுத்துவர்கள் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!