News December 15, 2025
திண்டுக்கல்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க
Similar News
News March 5, 2026
சிசிடிவி கேமிரா பொருத்த காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. “காவல்துறையின் மூன்றாம் கண் – சிசிடிவி கேமிரா பொருத்துவோம், பாதுகாப்பாக இருப்போம்” என்ற வாசகத்துடன் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் நிறுவனங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 4, 2026
திண்டுக்கல்லில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (மார்.04) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
திண்டுக்கல்: கேஸ் பில்லை விட அதிக பணமா?

திண்டுக்கல் மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.


