News January 23, 2026

திண்டுக்கல்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<> www.msmeonline.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

Similar News

News January 24, 2026

பழனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கோர்ட் அதிரடி!

image

பழனியில் 2023 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் தொல்லை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பழனி ராசாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (எ) முருகேசன் (44) என்பவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இந்த தண்டனை வழங்கப்பட்டது.

News January 24, 2026

நிலக்கோட்டை அருகே சம்பவ இடத்திலேயே பலி!

image

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே உள்ள அழகம்பட்டியைச் சேர்ந்தவர் சின்ன முத்து (30). இவர் பஞ்சர் கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் இரவு வேலையை முடித்துவிட்டு காமுபிள்ளை சத்திரத்திலிருந்து, அழகம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சாலை ஓர மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 24, 2026

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை 23.01.2026 நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நடைபெற்ற ரோந்து பணிகள் விவரங்களை வெளியிட்டுள்ளது. தலைமை அலுவலகம், டிஎஸ்பி மற்றும் நகர/தாலுகா காவல் நிலையங்களில் காத்திருக்கும் அதிகாரிகள், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கோடைக்காலம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் சேர்ந்தார். தொடர்பு எண்கள் மற்றும் பொறுப்பாளர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

error: Content is protected !!