News March 21, 2024

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி செயல்வீரர் கூட்டம்

image

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை இன்று திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர் கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல்(மே) மாவட்ட கழக செயலாளரும் உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி ஆகியோர் அறிமுகம் செய்து திமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி உரையாற்றினர்.

Similar News

News February 3, 2026

விஜய் விமர்சனம்: அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!

image

திண்டுக்கல்: திமுகவை ‘பழைய டப்பா’ என தவெக தலைவர் விஜய் விமர்சித்த நிலையில், கரூரில் உயிரிழந்தவர்களை பார்க்க மனமில்லாத விஜய், எப்படி 8 கோடி மக்களை காப்பாற்ற போகிறார் என அமைச்சர் ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சினிமா அரசியல் மக்கள் மத்தியில் எடுபடாது என்று சாடிய அவர், “இந்த டான்ஸ் பழைய டான்ஸ், இவரின் டப்பாங்குத்து இங்கே வேலை செய்யாது” என தெரிவித்துள்ளார்.

News February 3, 2026

திண்டுக்கல்: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

image

திண்டுக்கல் மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News February 3, 2026

BREAKING: பழனியில் இளம்பெண் படுகொலை

image

பழனி அருகே இன்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர். விசாரணையில் அப்பெண்ணின் பெயர் கீதா (25) என்பது தெரியவந்தது.

error: Content is protected !!