News April 16, 2025
திண்டுக்கல் கிரிக்கெட் வீரர்கள் கவனத்திற்கு !

தமிழக மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 14,16,19 வயதுக்குட்பட்ட இருபாலர் கிரிக்கெட் அணிக்கான தேர்வு வரும் ஏப்.18ஆம் தேதி நடக்கிறது. சீலப்பாடி பிரஸித்தி வித்யோதயா பள்ளியில் நடைபெறும் இத்தேர்விற்கு ஆதார், பிறப்புசான்றிதழ், விளையாட்டு உபகரணங்கள், வெள்ளை சீருடையுடன் வரவும். மேலும் விவரம் பெற 96556 63945 எண்ணை அணுகவும். SHARE பண்ணுங்க !
Similar News
News November 7, 2025
திண்டுக்கல் காவல்துறை முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று (நவ-07) சமூக வலைதளம் மூலம் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பொதுஇடங்களில் இலவச Wi-Fi இணைப்புகளைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தது. இல்லையெனில் செல்போன்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பிறரால் கண்காணிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண் அல்லது www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.
News November 7, 2025
திண்டுக்கல்: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இதை அனைவர்க்கும் SHARE பண்ணுங்க!
News November 7, 2025
திண்டுக்கல்: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். (SHARE)


