News December 22, 2025

திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையத்தில் பரவி வரும் போலியான கஸ்டமர் கேர் சேவைகளிடமிருந்து எண்ணுகளுக்கு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. வங்கிச் சேவை, மொபைல் சேவை, ஆன்லைன் சேவை என எதுவாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அப் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மோசடியில் சிக்கினால் உடனே 1930 சைபர் குற்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Similar News

News December 23, 2025

திண்டுக்கல் அருகே ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், அதிமுகவை காப்பாற்ற ஜெ.தீபா தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வலியுறுத்தி, போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் பஸ்நிலையம், மூன்றுலாந்தர், அவுட்டர், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில், எம்.ஜி.ஆர் அண்ணா, மற்றும் ஜெயலலிதா படங்களுடன் ஜெயலலிதாவின் ஒரே வாரிசு ஜெ.தீபா என்றும் அதில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News December 23, 2025

JUSTIN: கொடைக்கானலில் யானை மர்ம மரணம்!

image

திண்டுக்கல், கொடைக்கானல் பெரியம்மாபட்டி வனப்பகுதியில், யானை ஒன்றை இறந்த நிலையில் வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 20 வயது மதிக்கத்தக்க அந்த யானையின் தந்தங்கள் காணப்படாததால், சந்தேகம் எழுந்துள்ளது. யானை உயிரிழந்ததற்கான காரணம் குறித்து, வனத்துறையினர் விசாரிக்கின்றனர். யானையின் வாய் பகுதியில் காயம் இருந்ததால், தந்தங்களுக்காக யானை கொல்லபட்டதா என பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

News December 23, 2025

திண்டுக்கல்: ரூ.50,000 சம்பளத்தில் TNPSC-இல் வேலை!

image

திண்டுக்கல் மக்களே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் கீழ், நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகளுக்கான 76 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.20ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!