News February 24, 2026
திண்டுக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் தங்கள் நில விவரங்களை நிலப் பதிவேட்டில் (Farmers Registry) பதிவேற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் அறிவுறுத்தியுள்ளார். இதற்காகச் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. பி.எம்.கிசான் திட்ட நிதி உதவி தடையின்றித் தொடர்ந்து கிடைத்திட, விவசாயிகள் அனைவரும் உடனடியாக இந்தப் பதிவினை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.ஷேர் பண்ணுங்க
Similar News
News February 25, 2026
திண்டுக்கல்: டிகிரி போதும்., ரூ.55,833 சம்பளத்தில் வங்கி வேலை

பெடரல் வங்கியில் காலியாக உள்ள Associate Officers (Sales) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 -27 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 4ம் தேதிக்குள் இங்கு <
News February 25, 2026
தாட்கோ மூலம் விமானப் பணியாளர் பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு

திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் விமான முன்பதிவு ஆளுமை, கேபின் குழு பணியாளர் பயிற்சி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் தெரிவித்தார். 18–35 வயது, பிளஸ்–2 தேர்ச்சி, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 3 மாத பயிற்சியுடன் தங்கும், உணவு வசதி வழங்கப்படும். விண்ணப்பிக்க www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
News February 25, 2026
திண்டுக்கல்: சிறுமி பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு ஆயுள்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியில் 2023-இல் சிறுமியை காதலிப்பதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அம்பாத்துரை சக்திவேல் (24) என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். தீவிர விசாரணைக்குப் பின் திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடத்தியது. 24.02.2026 அன்று நீதிபதி ஆயுள் தண்டனையுடன் கூடிய 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


