News April 17, 2024
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா!

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு இன்று(ஏப்.17), இந்து மக்கள் எழுச்சி பேரவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டார். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வலியுறுத்தி வேட்பாளர் மற்றும் தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி அங்கிருந்த காவலர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
Similar News
News April 29, 2025
திண்டுக்கல் லிங்கத்திலிருந்து கிளம்பிய அதிசய ஊற்று!

திண்டுக்கல் மாவட்டம் சுக்காம்பட்டியிலுள்ள வாஸ்தீஸ்வரர் கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்புண்டு. இந்தக் கோயிலில் உள்ள சிவலிங்கத்தில் இருந்து சிறிய நீரூற்று உள்ளது. அந்த நீரைப் பருகினால் தோல் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும் என்கிறார்கள் பக்தர்கள். ஆகையால், இந்த நீரை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் வழக்கமும் அக்கோயிலில் உண்டு. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 29, 2025
போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற மே.2ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளன. இப்பயிற்சியானது திறன்மிக்க வல்லுநர்களால் மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளது. இவ்வலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது விவரங்களைப் பதிவு செய்து வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
திண்டுக்கல் பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள்

திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல்துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதன்படி ▶️நிலக்கோட்டை -04543-230493, ▶️ஒட்டன்சத்திரம்- 04553-241007, ▶️வடமதுரை -04551-238199, ▶️ திண்டுக்கல் -0451-2427928, ▶️கொடைக்கானல்- 04542-241225, ▶️பழனி- 04545 – 241032. பெண்களே இது போன்ற முக்கிய எண்களை SHARE செய்து SAVE பண்ண சொல்லுங்க.